பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விராட பர்வ ஏற்றப் பாட்டு

பிள்ளையாரே வாரும் பிழைவராமல் காரும்; எனக்குத்தெய்வம் நீரே, உமக்கடிமை நானே; ராமர்துணே வேணும்; வாரும்பெரு மாளே; காரும்இந்த வேளை.(கார்கள் திரண்டு) வந்துமழை பெய்ய வாழும்பயிர் உய்ய, உள்ளபடி செய்வாய், ஓடிவந்து மாலே, ஒர்மடுவில் ஆன ஏங்கியழும் போதே ஓடிவந்து காத்தாய், ஒது திரு மாலே, பாண்டவர் கதையைப் பாங்குடனே சொல்வேன்;

ஒருபதியால் ஒண்னு. உன்னுந்திரி யோனும் மன்னவரும் கூடிப் பன்னுபாண்ட வர்க்குச் சொன்னதோர் வருடம் இங்கிலக் தனிலே பண்னும்அஞ்ஞாத வாசம் பாண்டவர் தொலைத்து வேண்டிவரு வாரே, காண்டியன் முதலோர் (கடிதுவரு வாரே.) இருபதியால் ஒண்ணு. இருந்ததோர் வனத்தில் பொருந்திடும் முனியை அறிந்துதிரி யோனும் வருந்திஅடி பணிந்து, பெருங்தவ முனியே, பேசும்பாண்ட வர்க்கு மோசமாக யாகம் முடிக்கவேனும் என்ருன் முப்பதியால் ஒண்ணு. முதல்வன்திரி யோனும் முதலான முனியும் இனிமையுடன் வேதம் கனிவுடனே விரிச்சுக் காட்டிலே புகுந்து கஷ்டங்கள் பொருத்திக் கனதணலை மூட்டி முனிவர்மங்த்ரம் காட்டி வனந்தனிலே ஓமம் வளர்த்துகை யாலே, வந்ததொரு பூதம், அந்தப்புவி மேலே; காற்பதியால் ஒண்னு; காரணர் அறிந்து காரண முனிசெய் காரியமாம் யாகம் தாரணியின் மீது சண்ட்னே கினைந்து