பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விராட பர்வ ஏற்றப்பாட்டு 25

கன்மைசெய்தி ரென்று மன்னவன் மகிழ்ந்தான்; பின்னுமந்த மாட்டைப் பெருமையுடன் மீட்டார்; அருமையிது என்று அங்கவர் இருக்க, வடக்குத்திசை வந்தார் மன்னன்முத லோர்கள்.

அம்பதியால் ஒண்னு.

அரவக் கொடி ராஜன் இரவிசிறு பாலன் கங்கைதரு சீலன் கனத்தமறை யாளன், மிகுந்தபடை யோடே பொருந்துபசுக் கூட்டம் துரத்தியே மடக்கிச் சூழ்ந்துகொண்டு நின்ருர்; அறுபதியால் ஒண்னு. அங்கிருந் திடையர் அரசன்மனைக் கோடி ஆரையும்கா மைல் உத்தரனேக் கண்டு மெத்தவே அழுது அஸ்தின புரத்தில் அனைவர்களும் வந்து ஆவினத்தை எல்லாம் சாய்த்துக்கொண்டு போளுர்; எழுபதியால் ஒண்னு. இடையர்சொன்ன வார்த்தை யாவையும் அறிந்து படைஎடுப்பேன் என்று பாலகன் எழுந்தான், பருத்தரதம் ஏறி, பாகனந்த்ப்பேடி ஆகவரும் போதில் - அண்டரண்டம் எல்லாம் கொண்டபடை கண்டான்; எண்பதியால் ஒண்னு. எங்கும்.குதி ரைகள், - கண்கொள்ளாரதங்கள், எண்இறந்த யானே,

மண்ணிறைந்த சேனை (மார்புதட்டி வந்தார்.) பேரிகை முழக்கம், பெருத்ததிரும் மேளம், - நெருங்கிய கொடிகள், பொருந்திய குடைகள், நேர்ந்தபடை கண்டான்; நெருங்கியே வந்தான்; தொண்னு றுடன் ஒண்ணு. சொல்லிமுடி யாது; வல்லப சேனை மன்னவர்ஆ தேகர்; எந்தரதம் சும்மா இந்தமுனை கான என்றுமணம் வாடி, துன்றுமனே சேர்வேன்; என்றெடுத்தான் ஒட்டம்; இறைவன்மகன் அப்போ; பிள்ளையாரே வாரீர், பேடிஅது கண்டு ஒடியே தொடர்ந்து, ஒகெடுவாய் பிள்ளாய்,