பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விராட பர்வ ஏற்றப் பாட்டு 27.

துரோணரும் இளைத்தார்; துரியோதனன் கண்டான் எழுபதியால் ஒண்னு இனியவர் எடுப்பர்: தளராத சேனேயெல்லாம் தக்கஅசுவத் தாமா மிக்கபோர் விளைத்தான்; நீக்கனரு ளாளன் அர்ஜுனன்வில் கார் அற்றுவிழ எய்தான்; வெற்றிவந்த தென்ருன், வேங்தனும் மகிழ்ந்தான்; எண்பதியால் ஒண்னு. ஏறும்தேர் விஜயன் இதற்குத்தோற்க மாட்டான் என்று மனம் எண்ணிச் சுந்தரமாம் வில்லு, தந்ததொரு பானம் அந்த அம்பை எடுத்து அன்னவனேச் சாடித் தோற்கடிப்போம் என்று தோற்காத விஜயன் நாரிஒண்னு பூட்டி காலுபாணம் விட்டான், தேர்கள் பொடி யாச்சு; செகத்தோர் மகிழ்ந்தார்; அர்ஜுனனும் அப் போ சிறுவனே எதிர்த்தான், கீர்த்தியே மிகுந்தான் (கண்டவர்கள் போற்ற,) பிள்ளே யாரே வாரீர், பேருள்ள பெரியோன் தீதுகளைத் தீர்த்தான்; வீஷ்மரை எதிர்த்தான்; தாஷ்டிக முடனே தனஞ்செயனும் அப்போ அனந்தம்அம்பு விட்டான்; அத்தனையும் வீழ உத்தமன் உரைத்தான்; ஒருபதியால் ஒண் ணு.

ஒச்சவிலாப் பாணம் பாச்சின்ை கிழவன்; பார்த்தனும் அலுத்தான்; தீர்த்தன்மேல் அம்பு தேர்விஜயன் விட்டான்; (விட்ட அந்தப் போதில்): சாரதி மடிஞ்சு சலித்தவன் இருந்தான்: ' - கெலித்தபடை எல்லாம் கேலிக்குங்க ராச்சே! இருபதியால் ஒண்னு. -

எடுப்பாய்ஒட்ட மென்பார்; நடுக்கம்மெத்த ஆர்ை: ராஜகூட்ட மெல்லாம் யோசனையில் வீழ்ந்தார்; ஓங்குவில் விஜயன் மோகனக்கண யாலே மூர்ச்சையாகச் செய்தான்; ஆச்சரிய மாக. அனேவரும் விழுந்தார்; முப்பதியால் ஒண்னு.