பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிச்சந்திரன் ஏற்றப்பாட்டு

பிள்ளையாரே வாரும், பிழைவராமல் காரும்; மழைவரக்கண் பாரும்; மகாதேவர் மகனே, விக்கினரே, வாரும்; சர்க்கரைகற் கண்டு முக்கனியும் தேனும் முள்ளுடன் பலாக்காய், முடிச்சுடன் கரும்பு, அதிரசம் வகைகள், அவல்கடலை தேங்காய், அப்பனே, உனக்கு ... . " ஒப்புடன் படைப்பேன்; உன்னேத்தொழு வோர்க்கு - - என்றும்துணை செய்வாய், ஈசுவரன்றன் மகனே, ஒருபதியால் ஒண்னு.

ஆரப்பூங் கோயில் அம்மனத் தொழுதேன்; அம்மனைத் தொழுதேன்; அரிச்சந்திர புராணம் என்ன லானமாத்திரம் ஏத்தப்பாட்டாய்ப் பாடத் தப்புபிழை யால்ை சகலரும் பொறுப்பீர்; - இருபதியால் ஒண்ணு. -

இந்திரரும் தேவர் ரிஷிகள் முனிவோரும் கொலுசபை இருந்தார்; தேவேந்திர ராஜன் முனிவரரைக் கேட்டான் (முந்திமுகம் பார்த்து); பொய்சொல்லாத பேர்கள் பூலோகத்தில் உண்டோ? முப்பதியால் ஒண்னு.

பூதலம் அறிந்த முனிவர்கள் உரைத்தார்; அயோத்தியை ஆளும் அரிச்சந்திர ராஜன் என்னுடைய சீஷன் பொய்என்ற வசனம் நாவில்ை உரையான். நல்லது வசிஷ்டா, அவன், நாவுதப்பா னென்று நானறிய உரைத்தாய். அவனுடைய நெஞ்சை அறிந்தவன்போல் சொன்னங்; பித்தம்தலேக் கேறிப் பினத்துகிருய் போடா; காற்பதியால் ஒண்ணு.