பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முன்னுரை

தமிழ் நாட்டில் வழங்கும் நாடோடிப் பாடல்கள் பல. வெவ்வேறு இடங்களில் அந்த அந்த இடத்துக் கேற்ற வகையில் அந்தப் பாடல்கள் வழங்குகின்றன. நாடு முழுவதும் சென்று வழங்குவதனால் இவற்றை நாடோடிப் பாடல்கள், நாட்டுப் பாடல்கள், பாமரர் பாடல்கள் என்று வழங்குவார்கள்.

இந்தப் புத்தகத்தில், எனக்குக் கிடைத்த ஏற்றப் பாடல்களைத் தொகுத்துத் தந்திருக்கிறேன். உழைப்பாளிகளின் பாடல்களும் இத்தொகுதியில் உள்ளன.

நாடோடிப் பாடல்களில் உலக வழக்கில் உள்ள கொச்சைச் சொற்களே மிகுதியாக இருக்கும். இலக்கியப் புலவர்களின் பாடல்களுக்கும் இவற்றுக்கும் பல வேறு பாடுகள் உண்டு இவற்றில் ஒரடியே திருப்பித் திருப்பிவரும்.

ஏற்றமரத்தில் மேலே ஏறி இரண்டு அல்லது மூன்று பேர் மேலும் கீழும் நடந்து பாடுவார்கள். மரத்தின் நுனியில் இணைத்துத் தொங்கும் கோலின் துனியில் சாலைக் கட்டியிருப்பார்கள். ஏற்றமரம் சாயும்போது கோல் கீழே சென்று சாலில் தண்ணிரை முகக்கும். மறுபடி மேலுள்ளவர்கள் கீழே போகும்போது சால் மேலே வரத் தண்ணிரை இறைப்பவன், “ஒருபதியால் ஒண்ணு, இருபதியால் ரெண்டு” என்று இறைக்கும் சாலின் எண்ணிக்கையைச் சொல்வான்.

“ஏற்றப் பாட்டுக்கு எதிர்ப் பாட்டில்லை: பூசாரி பாட்டுக்குப் பின்பாட்டு இல்லை” என்று ஒரு பழமொழி வழங்குகிறது. இயற்கையாகவே ஏற்றப் பாடல்களை