பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

iv



வழிவழியாகவே பாடி வருகிறாகள். அவற்றை யார் முதலில் இயற்றினார்கள் என்று தெரியாது. பல இடங்களில் வழங்கும்போது ஒரே பாட்டில் பல அடிகள் கூடியிருக்கும்; சில அடிகள் குறைந்திருக்கும்; சில அடிகளில் பாட பேதம் இருக்கும். அத்தகைய பாட பேதங்களில் சிலவற்றை அடிக்குறிப்பில் கொடுத்திருக்கிறேன்.

இவற்றில் பொருள் தொடர்ச்சியாக இராது. சில அடிகளில் தொடர்ச்சி இருக்கும். எதுகை, மோனை, ஓசை ஆகியனவற்றை இவற்றில் காணலாம் இடையிடையே பல அரிய கருத்துக்கள் வரும். அப்படி வருவனவற்றில் சில வருமாறு :


ஒருவன்தாண்டா அல்லா, உலகமெல்லாம் ஆள்வான்.
மழைபெய்த வாசலிலே மைந்தன்டி காணேனே!
எங்கும் பராசக்தி எல்லாம் ஆன ஒத்தி.
அன்னங்கள் அழுமோ ஆண் மயிலைத் தேடி ?
ஏழைக் கேது காலம்?
எழுதாத ஓலை சுருளாமோ பொண்னே?
பசுவும் கிழம் ஆனால் பால்குணமும் போமோ?
பாம்பும் கிழம் ஆனால் பல் விஷமும் போமோ?
பார்ப்பான் கிழமபனால் பஞ்சாங்கம் பொய்யாமோ
என்னைக் கிருந்தாலும் இரவல் இந்தக் காயம்.
எனக்குத் தெய்வம் நீரே! உமக் கடிமை நானே.
இடுவஞ்சனை சூது இரண்டும் உதவாது.
அம்பிலே சமர்த்தன் அருச்சுனன் ஒருவன்.
ஆறுமுகம் என்றால் தீரும்வினை எல்லாம்.