பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 யூரீ ராமர் ஏற்றப் பாட்டு

மயேந்திரமலை ஏறி விச்வரூபம் கொண்டு இலங்கைமூதுார் தன்னை நாடியேதான் போக, மைநாகனைக் கண்டு, சுரதையாள் தனையும், குடலைப் புடுங்கி, லங்கிணியாள் தன்னை ஒருஅற்ையி ேைல அவள்தனேயும் கொன்று அசோகவனந் தன்னில் சீதையைக் கண்டு ஆனந்தம் கொண்டு ராமராம என்று. துதியினைச் செய்ய ராவணனும் அப்போ சிதையம்மன் முன்னே கொஞ்சிக்கெஞ்சிக் கேட்க, ராக்ஷசப் பதரே, துன்மார்க்க வார்த்தை - ஏற்குமோடா? போடாங் என்றுசொன்ன போது அவன்-இலங்கைநகர் சேர ராக்ஷ்சிகள் எல்லாம் தாமுறங்கி விட்டார்; அந்தச்சமயத்தில் கணையாழியைத் தானும் சிதைமுன்னே வச்சுச் சங்கதியைச் சொல்ல-ராமர்-கணேயாழியைக் கண்டு கையினல் எடுத்துக் கண்ணிலே ஒத்தி மன்னன்ராம ருக்குத் தெண்டனது இட்டாள்; சொன்னமொழி கேட்டுச் சூடாமணி வாங்கிக் கையிலே புடிச்சு அசோகவனம் தன்னை வேர்களைப் புடுங்க, அகூடியன் தடுக்க . . . அவன்தனையும் கொன்று இந்த்ரஜித்தன் தன்னை மண்டை கலங்க அவன்தன்னே அடிக்கஅவன் பிரம்மாஸ்திரம் விட்டுஅனுமாரையும் கட்டி ராவணன்முன் விட்டான்; வாலதை வளர்த்து மேல்இருந்தார் அனும்ார்; ஆரடாகுரங்கே, என்று-காவலர்கள் கேடக, ராமஸ்வாமி தூதன் என்றுசொன்ன போது சீதைத&னத் தேடி இங்குவங் தேனடா, உன்றனைக் காணவே வந்தேனடா நானும் என்றுசொல்லக் கேட்டு இவரைவெட்ட வந்தான்; தூதரைக் கொல்வது ஞாயமல்ல வென்று விபீஷணன் தடுக்க அனுமாருடை வாலில் கங்தைகளைச் சுத்தி