பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஸ்ரீ ராமர் ஏற்றப் பாட்டு

51

எண்ணெய்களை வார்த்து அக்கினியை மூட்டி அப்புறம்போ என்ன, அந்தச்சேதி தன்னைச் சீதையாள் அறிந்து, அக்கினி தேவனே, அனுமான நீயும் வருத்தவேண்டாம் என்றள்; அனுமாரவர் தாமும் இலங்கைநகர் எல்லாம் தாமுமே கொளுத்திச் சீதையினைக் கண்டு செலவுபெற்றுக் கொண்டு ‌‌பூ ஸ்ரீராமரிடம் வந்து, சீதையாரைக் கண்டேன்; இலங்கைமூ தூரில் இருக்கிராளே தாயார்: என்றுசொன்ன போது இராமரவர் கேட்டுச் சேனையை நடத்திச் சேதுபந்த னங்கள் வருணனை அழைச்சு வாராவதி கட்டி வெள்ளியங் கிரியில் தங்கியே இருக்க இராவணன் தானும் விச்வகர்மா வாலே அரமனைகள் செய்து தானுமங் கிருக்க, யோசனையும் கேட்க, அவரவர் பலங்கள் அறியவே உரைக்கக் கும்ப கர்ணனும் புத்தியது சொல்லித் தூங்கினுன்;அப் போது விபீஷணன்* புத்தி தான்எடுத்துச் சொல்ல அவனை. சொல்ல-உன்-உடன்பொறந்த பாவம் ஒழிந்ததென்று சொல்லி எழுந்துமே கடந்து ருராமரைக் கண்டு வந்தனந் தான் செய்து, நம்பின என்னையும் காருமையா என்ருன்; கலங்கியே பணிந்தான்; இலங்கைநகர் தன்னில் கண்டஅனு மாரும் ஸ்ரீராமருக்குச் சொல்லி விபீஷணன் தனக்குச் சிரஞ்சீவிய தாக இலங்கைநகர் தன்னை ஆட்சிசெயக்கொடுக்கப் பருத்தமிணி மாலை வைத்துமே பணிந்தான்; வானராள் தமக்கு வீடுகளைக் காட்டித்

தானுமே கொடுத்தான்; ராவணன் துர்தர்


(பா.ம்)* விபூஷணன்.