பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏற்றப் பாட்டு

(வேறு)

மாமரத்தின் கீழே ஒரு- மங்கைஉரை சொன்னாள்; மாமரங்கள் எல்லாம் மாமாறிப் போச்சு; பூமரத்தின்கீழே ஒரு பொண்ணுஉரை சொன்ள்ை: பூமரங்கள் எல்லாம் பூமாறிப் போச்சு; காமரத்தின் கீழே ஒரு கன்னிஉரை சொன்னாள்; காமரங்க ளெல்லாம் காய்மாறிப் போச்சு; . . . (சுவாமி) அன்பழகன் தம்பி, - உன் - அம்பும் வில்லும்

எங்கே? • அம்பாளுடன் கூடி அம்பும்வில்லும் தோத்தேன்; காரழகன் தம்பி, உன் கரும்புவில்லும் எங்கே? (அந்தக்) க ன் னி யி ட ம் கூ டி க் கரும்புவில்லும்

தோத்தேன். . . . . சிண்டழகன் தம்பி, உன் சிண்டும்வில்லும் எங்கே? (என்) சிண்டும்வில்லும் அண்ணு, சீதையுடன் கூடி சிதைமடி மேலே நான்-கூடிவிளே யாடிக் - கூடிவிளே யாடி என் - சிண்டும்வில்லும் தோத்தேன். ஆருதையா தோட்டம் அழகான தோட்டம்:(இது) தருமருடை தோட்டம்,தங்கக்குலே வாழை ஐயா, புண்யருடை தோட்டம், பூவங்குலை வாழை ஐயா, ஏழைவச்ச வாழை.ஏணிவைக்க வாச்சே; பஞ்சைவச்ச வாழை (சுவாமி) பந்தலிட வாச்சே, ஏழுவெள்ளம் சேனே எழுபதியால் ஒண்னு,

( வேறு ) மாயவனே வேண்டி (மகதேவரை வேண்டி} ஓடிவரும் புள்ளே ஒருகாலுத் தண்டை கைக்காப்பு வெள்ளி-அதைக் - கழற்றினவன் யாரோ? பிள்ளையில்லாப் பாவி பிடுங்கிவச்சுக் கொண்டான்;