பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏற்றப் பாட்டு 59

மக்களில்லாப் பாவி மறிச்சவிழ்த்துக் கொண்டான்; இருடிபொண்ணே போவோம், ஒரு சரவணம் பார்க்க; காட்டானே மேயும்,அந்தக் காட்டானேச் சத்தம், கோட்டைக்குத்தான் கேட்கும், ஆனே அலற: முத்தான பொன்னே, அத்தைமகன் வாருன்; கொட்டாத மோளம், கோவில்மோளம் கொஞ்சம்; அவன், கட்டாத தாலி, அவன், கழட்டிண்ைடி மாலை; மாலைஎன்ருல் மாலை, மல்லிகைப்பூச் செண்டு; இது, யாருடைய மாலை வருவதையா மேலே, அது, மாமனுடை மாலே, அங்கே: தாலிஎன்ருல் தாலி, அது, தங்கச்சரம் தாலி, ஒருகாலுத் தண்டை உலகவிலே பொறுமா? இவன், இடதுகாலுத் தண்டை ரெண்டாயிரம்

பொறுமா ? - அம்பாய பட்டு ஆம்பிளேயைப் பெத்தா: ஆம்பிள்ளைக்குப் பேரு-சிறு-வேம்புதனே வச்சாள்; எண்ணெயைக் குறைச்சான், எண்ணெய்க்செக்கான் விடு; அது, கல்லுக்கட்டி தேசம், கடலேப் பட்டான் ஊரு; எண்ணெய்வாங்கப்போனேன், இளமயிலேக் காணுேம்; பாவைகொள்ளப் போன சிறு பசுங்கிளியைக் -

காளுேம். துலுக்கருட தேசம் துடியவரக் காணுேம்; ஆரடியே பொண்ணே, இது, ஆருடைய தேசம்? இது, கள்ளருட தேசம்... போகுதடி கொள்ளே, அந்தப், பொத்தவண்ணன் வீட்டில், இது, கள்ளருட சீமை, கடலேக்காரன் ஊராம்; எம்பதடிக் கம்பம், இதை எடுத்துகட்ட டொம்பே அங்கே, டொம்பன்குழல் ஊதத் தும்பிகுழல் ஊத வந்தசனம் பார்க்க, எங்கள், தாரையங் கூத, சில, கூர்ந்தசனம் பார்க்கக் குதுகலித்து நோக்க நாலுலட்சம் பொண்கள் வெண்சாமரை வீச, வேதியர் குலமாம், இக்காலத்துப் பொண்கள்: ரெண்டுபொண்கள் கொண்டு போருளாம் வாடி, -