பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

v

ஏழை எளியோரைத் தாழச் சொல்லலாமோ ?
எழுதிப்படி தம்பி, கவனி பாடம் எல்லாம்.

இந்தப் பாடல்களில் பல அடிகள் தொடர்பும் பொருளும் இல்லாமல் இருந்தாலும் பழமையைக் காக்கவேண்டும் என்ற எண்ணத்தினால் அப்படியே வெளியிடுகிறேன்.

நாடோடிப் பாடல்களைப் பற்றிய ஆராய்ச்சியை இப்போது பலர் செய்கிறார்கள். பல நூல்கள் வெளியாகியுள்ளன. பழங்காலத்தில் 'பாலிகா பூஷணம்' என்ற நூல் ஒன்று உண்டு. அதில் பல நாடோடிப் பாடல்கள் இருந்தன. -

பெரும்பாலும் பெண்களே ஏற்றப்பாட்டு அல்லாத பிற பாடல்களைப் பாடுகிறார்கள். ஏற்றப்பாட்டு ஆண்கள் பாடுவது. ஏற்றத்தை இயக்குகிறவர்கள் ஆண்கள் தாமே?

ஏற்றப்பாட்டைப் போலப் பிற நாடோடிப் பாடல்களையும் தொகுத்து வைத்திருக்கிறேன். நாற்பதாண்டுக் காலமாகத் தொகுத்தவை இவை.

இலக்கியப் புலவர்கள் பாட்டிற் காணும் இன்பம் வேறு; நாடோடிப் பாடல்களிற் காணும் இயற்கைச் சுவை வேறு. மனிதனுடைய நற்குணங்களும் தீய குணங்களும் இவற்றில் வரும். ஒரு சாதியை மற்றொரு சாதியினர் இழிவாகச் சொல்வதும் உண்டு. இவை பழம்பாடல்கள் என்று எண்ணி அவர்கள் அந்த இகழ்ச்சியைப் பொருட்படுத்தமாட்டார்கள் என்று எண்ணுகிறேன். -

இப்போதெல்லாம் சினிமா வந்த பிறகு இத்தகைய பாடல்களைப் பாடுவோர் குறைந்துவிட்டனர். இன்னும்