பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏற்றப் பாட்டு 6 ||

கொண்டையிலே பூவிருக்கு- வேலையா, கொளச்சுமுடி போட்டிருப்பா. சுப்பையா, காத்தெனவே பறந்துவரா. வேலேயா, கஞ்சிகொண்டு வாராளோடா?. சுப்பையா, கதிரரிவாள் இருக்குதடா. வேலேயா, கதிரறுக்கும் காலம்அல்ல. சுப்பையா, ஆட்டுத்தழை அறுப்பாளடா-வேலேயா,

அண்டையிலே வந்துட்டாளோ?. சுப்பையா, அன்னம் போலே முன்னேவரா வேலேயா, (அவ என்) அத்தைமவ ரத்தினம்டா- சுப்பையா, (அவள்) உரிமைப் புருசனும்நீ. வேலையா, அடுத்தமாசம் பரிசம்வைப்பேன். சுப்பையா!

(இது ஏற்றப் பாட்டு نفولتافه இல்லை. இக் காலத்தில் யாரோ புதியதாகப் பாடியது போல் தோன்றுகிறது.)