பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழில்கள்

63.

உன்னை நம்பி ஏலேலோ ஐலசா
வரப்பை நம்பி ஏலேலோ ஐலசா
வயலே கம்பி ஏலேலோ ஐலசா
கதிரை நம்பி ஏலேலோ ஐலசா
நெல்லே நம்பி ஏலேலோ ஐலசா
காத்தை நம்பி ஏலேலோ ஐலசா
கடவு கட்டு ஏலேலோ ஐலசா
களம டிச்சு ஏலேலோ ஐலசா
காத்தைக் கட்டி ஏலேலோ ஐலசா
துரக்கிக் கொண்டு. ஏலேலோ ஐலசா
எஜமானன் வீடுபோகனும் ஏலேலோ ஐலசா.

நடவுப் பாட்டு -



எதிரான வீட்டிலே இலஞ்சியம்போல் பொண் இருக்காள்;
கழுதை உதடிமேலே கண்டாசைப் பட்டாரு;
நூலாலே தேராம்; கொடிமுத்தாம்; சப்பரமாம்;
சப்பரத்துக் குள்ளிருக்கும் சாதிக்காய்க் கேடயமாம்;
கேடயத்து மேலே கிளிமூக்கு வாகனமாம்;
வாகனத்தின் மேலேறி மகமாயி வாருளாம்;
அரைச்ச மஞ்சள் நிறத்தைப் பாரு;
அம்மி கொண்ட பொன்னைப் பாரு;
குளிச்ச மஞ்சள் நிறத்தைப் பாரு;-அம்பாளுக்குக்
கொண்டை கொண்ட பொன்னேப் பாரு

ஏறாத தெத்தெருமைக் காரா, -
ஒன், பொண்டாட்டி செத்துப் போன; வாடா:
அவள், பேர்னலும் போயிப் போரு மயிலே;
நான், வல்லையின்னு சொல்லப்போறேன் குயிலே!

பிள்ளையார் கல்லாலே, பிபாரியும் கல்லாலே;
ஐயனர் ஏறிவரும் கிளிவாகனம் பொன்னலே,
இந்திரரை நான்கோக்கி எடுத்தேன் எலேமுடிய,
சாச்சேன் சனிமூலை; உன்நாடு, உன்தேசம்;
பொன்ன விளையவேணும்; (பொருளாச்சொரியவேனும்,)
முக்கலம் பச்சரிசி, மூவாயிரம் செவ்விளநீர்,