பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

然2 . தறிப் பாட்டு

பள்ளத்தில் வெள்ளமது துள்ளியே போகுது; பறியடா, தறியடா, மிறியடா, வெறியா! பிள்ளை வெள் ளாடதே பிசினிபோல் ஆக்கு;

பெருச்சாளி சண்டைக்கு நெரிச்சுக்கொண்டு வருவான்; கள்ளக் குடிச்சு துள்ளிவி ழாதே; -

கஞ்சிமிஞ் சித்தென்று துள்ளாதே படுவா: தெள்ளிப்போட உள்வாயில் திருப்படா மண்ணே; சேறுபோ லாக்காதே; பாலுபோ லாக்கு; வள்ளலை கெனச்சுக்கொள், உள்ளபடி யாக;

மணியாச மாச்சு. ஏலேலோ ஐலலோ (வேலனே)

( 3 )

மணியாசம் ஆனபின்பு -

கால்நான்கு மாகாக்குச் செப்ப னிட்டுத் தணிகைமலை முருகன் தாளேத் துதித்துத்

தெய்வான வள்ளியின் பாதங்கள் போற்றித் தறிநாக்கு கட்டதில் படைமரம் போட்டு...

率 。率 岑

திரியான படைச்சாய்ப்பில் சுண்டுவிரல் வச்சுச் செங்கல் காக்குக்கு நங்கூரம் பாய்ச்சு;

மரமாக இருக்குமுன்னு எதிராக நட்டு.

வழுகாமல் விட்டம் சரியாகக் கட்டு.

  • குறுக்கோலை கொண்டு ஒசத்தியே பாரு;

சிறுசாக விழுதுகொண்டு. நடுமையம் கட்டு, .

திட்டுமட்டு மாகக் கெட்டியாக் கட்டு; . இறுக்கிமணல் சலம்வார்த்துக் கத்திரிப்புணி பாரு - எங்குமே செவ்வனக் கண்டு பாரு;

எலேலோ மயில் வேலோனே!

- *ಈಥ್ರಸ್