பக்கம்:ஏலக்காய்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஏலக்காய்
ஏலக்காய் ராணி! 1

நறுமணப் பொருட்களின் ராணியென ஏற்றிப் போற்றப்படும் ஏலக்காய், இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்றிலே கிட்டத்தட்ட ஐயாயிரம் ஆண்டுகளின் பெருமையையும் பெருமிதத்தையும் கொண்டு விளங்குகிறது! — இந்திய ஏலக்காய், அதன் நறுமண இன்சுவையின் பயனாகவும் பலனாகவும், இன்று உலகத்தின் அரங்கத்திலே கொடிகட்டிப் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக் கிறது! — ஆகவேதான், உலகத்தின் நாடுகள் எல்லாம் இந்திய ஏலக்காயை விரும்பி வரவேற்றுப் பயன்படுத்திப் பயன் அடைந்தும் வருகின்றன!

சிறிய ஏலக்காய்

இந்திய நாட்டிலே, வனப்பும் வளமும் கொழித்திடும் மேற்கு மலைத் தொடர்ப் பகுதிகளில், கேரளம், கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இயற்கை அன்னையின் சீதனங்களாகத் திகழ்ந்திடும் காடுகளிலும் காடுகளிலுள்ள மரங்களின் நிழல்களிலும் ஏலக்காய்ச் செடிகள் தழைத்தும் செழித்தும் வளருகின்றன; வளர்ச்சி அடைகின்றன. உணர்ச்சிமிக்க இந்தச் சிறிய ரக ஏலக்காய்ச் செடிகளுக்குத் தாவர இய்லில் 'எல்ட்டேரியா கார்டமோம்' (Elettaria Cardamomum) என்று தனிப்பட்ட பெயர் வழங்கப்படுகிறது; இவற்றுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/12&oldid=1000625" இலிருந்து மீள்விக்கப்பட்டது