பக்கம்:ஏலக்காய்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

இஞ்சி இனம்!

இஞ்சி இனம் சார்ந்த ஏலக்காய், வாசனைத் திரவியங்களின் ராணியெனப் பெருமையோடும் பெருமிதத்தோடும் புகழப்படுவதால், இது விலைமதிப்புமிக்க வர்த்தகப் பொருளாகவும் விளங்கி வருகிறது; மேலும் குறிப்பிடத்தக்க பனப்பயிராகவும் மதிக்கப்படுவதால், ஏலப்பயிர்ச் சாகுபடி கூடுதலான செலவினங்களைக் கொண்டதாகவும் அமைகிறது.

1966 காலக் கட்டத்தில், ஏலக்காய்ச் சாகுபடியின் பரப்பளவு ஏறத்தாழ 72,000 ஹெக்டேர் அளவில் அமைந்தது. தற்போது, 1985 காலக் கட்டத்தில் அது, கிட்டத்தட்ட 1,00,000 ஹெக்டேர் பரப்பளவிற்கு வளர்ச்சியும் முன்னேற்றமும் அடைந்துள்ளது!

ஆரம்பக் காலத்தில், தாவரங்களைப் போலவே, ஏலச் செடிகளும் பயிர் செய்யப்பட்டன! — செடிகளின் நடுத்தண்டுகளை நட்டு வளர்த்ததால், நோய்த் தாக்குதல் அதிகரித்தது; எனவே, விதைப்பு முறை பின்னர் நடை முறைப்படுத்தப்பட்டது. நாற்றுப் பண்ணைகளிலே விதை விதைத்து, நாற்றுக்களை வளர்த்து, வளர்த்த நாற்றுக்களைப் பிடுங்கி அவற்றைத் தாய் நிலங்களில் நடவு செ ய்து பேணிக் காத்து வளர்க்கும் வேளாண்மை முறைதான் இக்காலத்திலே சிலாக்கியமானதாகக் கருதப்பட்டு வருகிறது!

ஏலக்காய்ப் பயிர் விளைச்சலின் கால அட்டவனை கீழ்க்கண்டவாறு அமையும்:

அக்டோபர் – நவம்பரில், விதைப்பு.
ஜூன் – ஜூலையில், மறுநடவு.
ஆகஸ்ட் – செப்டம்பரில், காய் எடுப்பு — அறுவடை!

ஆமாம்; பொதுவான கால நிர்ணயம் இது! — ஏலக்காய்ப் பயிர்ச் சாகுபடிக்கான நடைமுறையின் பொதுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/14&oldid=505911" இலிருந்து மீள்விக்கப்பட்டது