பக்கம்:ஏலக்காய்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

சாகுபடி ஆலோசனைகளுக்கு ஏற்றபடி தூவி வைக்கவும் வேண்டும். அவ்வப்போது, மண்ணின் ஈரத்தைக் கருதித் தூவிய உரங்களையும் லேசாகக் கிளறிவிட்டால், செடிகள் பின்னர் வெப்பநிலையை எதிர்த்துச் சமாளித்துத் தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தி மண்ணிற்குக் கிடைக்கக் கூடும்.

இரண்டாவது சுற்றாக உரங்களை இடும் பணிகள் மறு ஆண்டின் மே-ஜூன் காலக்கட்டத்தில் இடம் பெறும்: எரு இடுதல், சருகு இடுதல் மற்றும் தழைச்சத்து உரம் இடுதல் முதலான செய்முறைகள் காலக் கிரமப்படியும் திட்டமிட்ட வேளாண்மை நடைமுறைகளுக்கு உகந்தபடியும் தொடரும். செடிகளுக்கு ஊடே அமைக்கப்பட்ட இடைவெளிப் பகுதிகளையும் உழுது பண்படுத்துதல் அவசியம்,

காலம் வளர்கிறது.

ஏலச்செடியும் வளர்கிறது.

வேர்க்கிழங்குகள் வளர்ச்சி அடைந்து பூமிக்கு மேல் வரும்போதும், இளங்கொம்புகளில் பூங்கொத்துக்கள் தோன்றும் பொழுதும், செடிகளின் அடிப்பகுதிகளைச் சுற்றிலும் அளவோடு மண் பரப்பப்படுவதால், செடிகளைச் சுற்றி இளஞ்செடிகள் உற்பத்தியாகவும் வாய்ப்பு வசதி ஏற்படலாம்.


நிழல் சீரமைப்பு!

மண்ணில் பொன்விளையும் புண்ணியப் பூமி பாரதம், சரித்திரபூர்வமான இந்த உண்மை ஏலக்காய்க்கு மிக நன்றாகவே பொருந்தும். ஏலம் விளையும் மண், பொன் விளையும் மண் இல்லையா?

உண்மை பொய்த்தது கிடையாது.

ஆனால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/37&oldid=506011" இலிருந்து மீள்விக்கப்பட்டது