பக்கம்:ஏலக்காய்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

பூச்சி நோய் மருந்தையும் ஹெக்டருக்கு 25 கிலோ அளவில் தூவி விடலாம்.

நோய்ப் பராமரிப்பில் அக்கறை கூடினால், 'த்ரிப்ஸ்’ பூச்சிகளின் நடமாட்டம் குறையும்!


ரோமக் கம்பளிப் புழுக்கள்!

'ரோமக் கம்பளிப் புழுக்கள்', பற்பல ஆண்டுகளுக்கு ஒரு தடவை, ஏராளமாகத் தோன்றும் சித்திர விசித்திரப் பழக்கம் உடையவை. கூட்டம் கூட்டமாகக் கூடிவாழும் இயல்பும் இவற்றுக்கு உண்டு. நிழல் தரும் மரங்களின் அடிப்பகுதிகளில் கும்பல் கும்பலாகத் தோன்றி, பின்பு அவை ஏலச் செடிகளுக்குத் தாவுவது வழக்கம். இலைகள் தாம் உணவு. ஆகவேதான், நோய்க்கு வசப்படும் இலைகள் மிகக் குறுகிய காலத்திற்கு உள்ளாக்வே அழிந்து சேதம் அடைகின்றன.

இவ்வகைக் கம்பளிப் புழுக்களைச் சாகசமாகவும் சாமர்த்தியமாகவும் பிடித்து நசுக்கிவிடுவது சுலபமான தடுப்பு முறையாக அமையலாம்.

'மெதில் பராதியான்' அல்லது,' மனோக்ரோ டோஃபஸ்' வேதியல் சார்ந்த பூச்சிக்கொல்லி மருந்தை 1 % அளவில் அடிமரங்களின், அதாவது நிழல் மரங்களின் அடியிலுள்ள கீழ்ப்பகுதிகளில், மந்தை மந்தையாகக் கூடியுள்ள பகுதிகளில் தெளித்தால், அவை அங்கேயே இயற்கை எய்தும்.


கொம்புத் துளைப்பான் பூச்சிகள்!

இளங் கொம்புத் துளைப்பான் பூச்சி, மற்றும் வித்துறைத் துளைப்பான் பூச்சிகளாலும் நாற்றங்கால் செடிகளுக்குப் பங்கமும் பாதகமும் ஏற்படும். செடிகளின் வெளிப்புறத் தண்டுகளைத் துளைத்து ஊடுருவிச் செடிகளை முழுமையாகவே அழித்துவிடும் இயல்பு கொண்டவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/48&oldid=505953" இலிருந்து மீள்விக்கப்பட்டது