பக்கம்:ஏலக்காய்.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மணப்பொருள் மாண்பு

ச. மெய்யப்பன் எம். ஏ.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

ஏலக்காய் மணப் பொருளும், மருந்துப் பொருளும் ஆகும். உணவுக்குச் சுவையூட்டும். உடலுக்கு நலம் ஊட்டும். அறுசுவை உணவில் சுவையை அதிகரிப்பதற்கும், நறுமணம் பெறச் செய்வதற்கும் ஏலக்காய் பயன்படுகிறது. இந்திய நாடு மணப்பொருளுக்கு பெயர் பெற்ற நாடு. இந்தியர்கள் மணப்பொருளைப் பயன்படுத்திய திறத்தினை வேதகால இலக்கியங்கள் பேசுகின்றன. இந்திய மணப் பொருளின் மாண்பினை வெளிநாட்டு யாத்ரிகர்களும் வியந்து போற்றியுள்ளனர். ஏலக்காயும், கிராம்பும் நெடுங் காலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததைத் தமிழ் இலக்கி யங்கள் விரிவாகப் பேசுகின்றன. மலையில் தோன்றும் பொருள்களைப் பற்றி மலைவளம் பேசும் போது இலக்கிய ஆசிரியர்கள் எழில்படக் கூறியுள்ளனர்.

ஏலக்காய் பற்றி தமிழில் வெளிவரும் முதல் நூல் இது. ஏலக்காய் வாரியத்தில் நீண்டநாட்கள் பணி செய்த திரு. பூவை, எஸ். ஆறுமுகம் இந்நூலை சிறப்பாக எழுதியுள்ளார். ஏலக்காயின் இயல்பு, அதை விதைப்பதற் கேற்ற நிலம், விதைக்கும் காலம், உரமிடுதல், களை யெடுத்தல், காய் பறித்தல் முதலியனவற்றையும் கூறி யுள்ளார். ஏலக்காயின் விலை பற்றியும் விளைச்சல் அளவு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/6&oldid=1290285" இலிருந்து மீள்விக்கப்பட்டது