பக்கம்:ஏலக்காய்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏலக்காய்ச் சட்டம்!


இந்திய ஏலக்காயின் வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் உரியதான நடைமுறைச் செயற்பணிகளை இயக்கவும் இயங்கச் செய்யவும் துணை நிற்கும் வகையில், ஏலக்காய்ச் சட்டம் 1965-ல் இயற்றப்பட்ட பின்னர், இந்திய அரசின் நிர்வாகப் பொறுப்பின் கீழ் ஏலக்காய் வாரியம் தனியானதும் தனிப்பட்டதுமான ஒர் அமைப்பு ஏற்படுத்தப்பட்ட பின்னர், 1966-67 முதல் 1970-71 வரையிலான ஐந்தாண்டுக் காலக் கட்டித்தில் ஏலக்காய் உற்பத்தி சராசரியாக 2500 மெட்ரிக். டின் என்னும் அளவில் அமைந்து, பிறகு 1979-80-ல் 4500 மெட்ரிக் டின்னாக உயர்ந்தது; உச்சம் அடைந்தது. பிந்திய 1981-82 ல் இத்தியாவின் ஏலக்காங் விளைவின் அளவு 4100 மெட்ரிக் டன் என்றால், அதில் கேர்ள்ம் 2800 மெ.டன், கர்நாடகம் 1000 மெ.டன், தமிழ்நாடு 300 மெ.டன் என்ற நிலவரத்தில் மாநில வாரியான உற்பத்தி அளவுகள் அமைந்தன. 1983-84 ல் விளைச்சல் 1600 மெட்ரிக் டன்னாகவே மொத்தத்தில் அமைந்தது. இயற்கையின் பரிசோதனைக்கு இந்திய ஏலக்காய். irத்திரம் தப்பி விதிவிலக்காக அமைந்திட முடியுமா என்ன?

1966-67 முதல் 1971-72 வரையிலான காலப் பிரிவிலே, இத்திய நாட்டினின்றும் ஏற்றுமதி செய்யப்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/63&oldid=506021" இலிருந்து மீள்விக்கப்பட்டது