பக்கம்:ஏலக்காய்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70


வாரியத்தின் அமைப்பு:

கடந்த 17-11-1982ல் திருத்தி அமைக்கப்பட்ட வாரியத்தில் 23 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். நாடாளுமன்ற அங்கத்தினர்கள் மூவர்: இவர்களில் இருவரை மக்கள் அவையும் ஒருவரை மாநிலங்கள் அவையும் தேர்ந்தெடுக்கும். மத்திய வர்த்தகம், நிதி மற்றும் விவசாய அமைச்சகங்களின் பிரதிநிதிகள் மூவர். ஏலம் விளையும் தென் மாநில அரசுகளின் பிரதிநிதிகளாக 15 உறுப்பினர்களையும் மத்திய அரசே நியமிப்பது நடை முறை. இவர்கள் மூன்று மாநிலங்களின் விவசாயிகள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள், பொருள் நுகர்வோர் மற்றும் பிற ஏலக்காய்த் துறையினருக்குப் பிரதிநிதிகளாகப் பணி புரிவார்கள்.

அத்துடன், வாரியத்தின் துணைத் தலைவரை வாரியத்தின் உறுப்பினர்களே தேர்ந்தெடுக்க, வாரியத்தின் செயலாளரை மத்திய அரசே நியமனம் செய்யும்!


வாரியத்தின் மேலாண்மை

உலக நாடுகளின் ஒருமித்த கவனத்தையும் ஒருங்கிணைந்த வரவேற்பையும் பெற்றுள்ளது அல்லவா இந்திய ஏலக்காய்?—அதுபோல்வே தான், ஏலக்காய் வாரியத்தின் பயனுள்ள செயற்பணிகளும் உலக மேடைகளில் சீரோடும் சிறப்போடும் பேசப்படுகின்றன.

வாரியத்தின் இந்நாள் தலைவராக (Chairman) திரு. கே. மோகன சந்திரன் ஐ.ஏ. எஸ் நற்பணி ஆற்றி வருகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/73&oldid=505983" இலிருந்து மீள்விக்கப்பட்டது