பக்கம்:ஏழாவது வாசல்.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஆட்டுப் புலி

ஒரு காட்டில் ஒரு பெண்புலி யிருந்தது. அது அப்போது கர்ப்பமாயிருந்தது. அதன் வயிற்றில் ஒரு புலிக்குட்டி தோன்றிப் பிறக்க விருந்தது. இன்றோ நாளையோ புலி குட்டி போட்டு விடக் கூடிய நிலையில் இருந்தது. அப்போது அந்தப் புலி இருந்த வழியாக ஓர் ஆட்டு மந்தை போய்க் கொண்டிருந்தது. ஆட்டு மந்தையைக் கண்டவுடன் பெண்புலியின் மனத்தில் ஆசை பிறந்தது. ஆட்டு ரத்தத்தைக் குடிக்க வேண்டுமென்று அது ஆசைப்பட்டது. எனவே, அது அந்த ஆட்டுமந்தையின் மேல்பாய்ந்தது. நன்றாக கொழுத்த ஓர் ஆட்டை நோக்கி அது பாய்ந்தது. அது பாயும் போது அந்த ஆடு விலகிச் சென்றபடியால் அது குறி தவறித் தரையில் மோதி விழுந்தது. அந்த அதிர்ச்சியில் அதன் உயிர் போய் விட்டது. அதே சமயத்தில் அதிர்ச்சியின் காரணமாக வயிற்றில் இருந்த குட்டியும் பிறந்து விட்டது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழாவது_வாசல்.pdf/17&oldid=989003" இலிருந்து மீள்விக்கப்பட்டது