ஆட்டுப் புலி17
தர தர வென்று இழுத்துக் கொண்டு குளத்துக்குச் சென்றது. குளத்தின் கரையில் அதை நிறுத்தி நீருக்குள் அதன் உருவத்தைக் காட்டியது.
"இதோ பார். நீயும் நானும் ஒரே மாதிரிதான் இருக்கிறோம். நாம் இருவரும் புலிகள். ஒரு புலி பயந்து ஓடலாமா? தின்னப்பட வேண்டிய ஆடுகளோடு சேர்ந்து வாழலாமா? இதோ பார் இந்த ஆட்டிறைச்சியைத் தின்னு” என்று கூறிப் புதுப்புலி ஆட்டிறைச்சித் துண்டொன்றை நீட்டியது.
ஆட்டுப் புலி தின்ன மாட்டேனென்று மறுத்தது. “நான் புலியல்ல ஓர் ஆடுதான். என்னை விட்டு விடு. ‘மெம்மெம்மே’ என்று கத்தியது.
புதுப்புலி சும்மா விடவில்லை. இரத்தம் வழியும் இறைச்சித் துண்டு ஒன்றைப் பழைய ஆட்டுப் புலியின் வாயில் பலவந்தமாகத் திணித்தது. தன் நாக்கில் இரத்தம் பட்டதும், அந்த இரத்தச் சுவை அதற்குப் புதிய உணர்ச்சியை ஊட்டியது. அதை மேலும் மேலும் பருக வேண்டும் என்று தன்னையறியாமலே அதற்கு