இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஓர் ஊருக்குப் பக்கத்தில் ஒரு மாந்தோப்பு இருந்தது. அந்த மாந்தோப்பு வழியாக இரண்டு மனிதர்கள் சென்றனர்.
சித்திரை மாதம்! மாமரங்களில் தங்கக்கட்டிகள் போல் மாம்பழங்கள் பழுத்துக்தொங்கிக் கொண்டிருந்தன. பார்த்தவர் கண்ணைப் பறிக்கும் வண்ணம் அவை கொத்துக் கொத்தாகத் தொங்கின. இருவரும் அண்ணாந்துப் பார்த்தனர். ஒரு மனிதன் நின்ற இடத்திலேயே நின்று கொண்டு அங்குள்ள மாமரங்களை எண்ணினான். ஒரு மரத்தில் சுமார் எத்தனை பழங்கள் இருக்கும் என்று கணக்குப் போட்டான். அதைப் பெருக்கிப் பார்த்தான். ஒரு மாம்பழம் என்ன விலை போகும் என்று எண்ணிப் பார்த்தான். மொத்த மாம்பழமும் எத்தனை ரூபாய் ஆகும் என்று கணக்குப் போட்டான். தோப்பின் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்று