அருள் நிறைந்த அன்னை 31
உறைபோட ஒரு துண்டுத் துணி வேண்டும். ஏதாவது துண்டு விழுந்திருந்தால் ஒன்று கொடுக்கிறாயா?” என்று கேட்டான்.
துணிக்கடைக்காரன் பெருங்கஞ்சன். அந்தத் துண்டுத் துணிகூடத் தன் ஆசிரியனுக்கு விலையில்லாமல் கொடுக்க அவன் விரும்பவில்லை.
“ஐயா, தங்களுக்கு இல்லை என்று சொல்ல எனக்குமிகவும் வருத்தமாயிருக்கிறது. சற்று முன்னால் வந்திருக்கக் கூடாதா? இருந்த துண்டுத்துணிகளையெல்லாம் சற்று முன்தான் ஒருவன் வந்து விலைக்கு வாங்கிக் கொண்டு போகிறான். இப்போது என் கையில் ஒன்றும் இல்லை. என்றாலும் அடுத்தாற்போல் துண்டு விழும்போது, நான் உங்களுக்கு அதைத் தந்து விடுகிறேன். நீங்களும் தயவு செய்து எனக்கு அடிக்கடி நினைவுபடுத்துங்கள்” என்று திறமையாகப் பதில் சொல்லி அனுப்பினான்.
பிராமணன் ஏமாற்றத்தோடு வீடு திரும்பினான்.
துணிக்கடைகாரனுடைய மனைவி இதைக் கவனித்துக் கொண்டிருந்தாள். உடனே, ஒரு