இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
32ஏழாவது வாசல்
வேலைக்காரனை அழைத்து, அந்தப் பிராமணனை வீட்டுக்குப் பின் பக்கமாகக் கூட்டி வரும்படி சொல்லி யனுப்பினாள்.
அந்த வேலைக்காரன் வேகமாகச் சென்று வழியில் பிராமணனைப் பார்த்து உடனே வீட்டுக்குப் பின்பக்கமாகக் கூட்டிக் கொண்டு வந்து சேர்ந்தான். பிராமணனை அந்தப் பெண் வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள்.
“ஐயா, என் கணவரிடம் தாங்கள் என்ன, கேட்டீர்கள்?” என்று அந்தப் பெண் கேட்டாள்.
பிராமணன் நடந்ததைக் கூறினான்.
"ஐயா, வருத்தப்படாதீர்கள். அமைதியாகத் தங்கள் வீட்டுக்குச் செல்லுங்கள். நாளைக் காலையில் உங்கள் வீட்டுக்கு நான் துணி யனுப்பி வைக்கிறேன்” என்றாள்.
பிராமணன் மனநிறைவோடு வீடு திருமபினான்.
பொழுது சாய்ந்தது. வாணிபம் முடிந்து கடையைப் பூட்டிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான் துணிக்கடைகாரன்.