இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அருள் நிறைந்த அன்னை 33
“கடை மூடிவிட்டீர்களா?” என்று அவன் உள்ளே நுழைந்தவுடனேயே கேட்டாள் மனைவி.
"ஆமாம். மூடிவிட்டேன்! ஏன் கேட்கிறாய்?" என்று கேட்டான் கடைகாரன்.
“எனக்கு விலையுயர்ந்த ஒரு துணி வேண்டும்” என்றாள் மனைவி.
“உனக்கில்லாமலா? காலையில் எடுத்துத் தருகிறேன்” என்றான் கடைகாரன்.
“எனக்கு இப்பொழுதே வேண்டும்' என்றாள் அவள் உறுதியுடன்.
என்ன அவசரம் வந்துவிட்டது. நாளைக் காலையில் கடை திறந்ததும் எடுத்துத் தருகிறேனே!” என்றான் கடைகாரன்,
"தர விரும்பினால் இப்பொழுதே தாருங்கள். இல்லா விட்டால், எப்பொழுதுமே வேண்டாம்” என்று சிறிது கோபத்துடன் கூறினாள் அவள்.
கடைகாரன் அவள் கோபத்துக்கு அஞ்சி விட்டான். வேறு ஆட்களிடம் சொல்லுகிறபடி அவளிடம் பதில் சொல்லமுடியுமா? அவள்