இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஓர் ஊரில் ஒரு மனிதன் இருந்தான். அவன் காட்டுக்குப் போய்த் தவம் செய்தான். இடைவிடாமல் பதினான்கு ஆண்டுகள் தவம் செய்தான். இப்படித்தவம் செய்ததன் பலனாக அவனுக்கு நீர்மேல் நடக்கும் சக்தி வந்தது.
நீர்மேல் நடக்கும் ஆற்றல் வந்தவுடன் அவனுக்குத்தலைகால் புரியவில்லை. ஒரேமகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சியை யாரிடமாவது சொல்லி தன் சக்தியை மெய்ப்பித்துக் காட்ட வேண்டும் என்று அவனுக்கு ஆவல் உண்டாயிற்று.
அவனுக்குக் குரு ஒருவர் இருந்தார். அவர் சிறந்த அறிவாளி. பெரிய மகான்! இவரிடம் தான் முதன்முதல் தன் வலிமையைக் காட்ட வேண்டும் என்று ஓடினான். ஆரவாரத்தோடு “சுவாமி,சுவாமி” என்றுகத்திக்கொண்டு ஓடினான். அவர் காலடியில் வீழ்ந்தான்.