பக்கம்:ஏழாவது வாசல்.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாய் வளர்த்த மனிதன்  43


"இந்த வேலையை விட்டுவிடு. அந்த நாய்க்குப் பகுத்தறிவு கிடையாது. நீ அதை இப்படிக் கொஞ்சுவது சரியில்லை. என்றாவது ஒருநாள் அறிவற்ற அது உன்னைக் கடித்து விடக்கூடும். அதற்கு வெறி வந்தபோது அது உன்னைக் கடித்தால், உன் உயிருக்கே ஆபத்தாக முடியும்” என்று எச்சரித்தார்.


அவர் கூறுவது சரியென்றே அவனுக்குப் பட்டது. அன்று முதல் நாயோடு கொஞ்சு வதைவிட்டு விட்டான். அதைத் தூர எறிந்து விட்டுப் பேசாமல் இருந்தான். ஆனால் அந்த நாய் வழக்கம் போல அவனிடம் வந்து விளையாடத் தொடங்கியது. வாலைக் குழைத்துக் கொண்டு அவனைச் சுற்றிச் சுற்றி வந்தது. அன்புடன் மோந்து கொண்டே அவன் மடிமீதும் தோள்மீதும் தாவி விளையாட முயன்றது. ஆனால் அந்த மனிதன் அப்படி அந்த நாய் கொஞ்ச வரும் போதெல்லாம் அதை அடித்துத் துரத்தினான். பலமுறை நன்றாக அடிபட்ட பிறகுதான் அது அவனிடம் நெருங்காமல் இருந்தது. அவனுக்குத் தொல்லையும் விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழாவது_வாசல்.pdf/45&oldid=993891" இலிருந்து மீள்விக்கப்பட்டது