இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஒரு பிராமணன் இருந்தான். அவன் அடிக்கடி தட்சிணேசுவரத்துக்கு வருவான். மிக எளிமையானவன். எப்பொழுதும் வணக்கத்தோடுதான் பேசுவான். என்னை அடிக்கடி சந்திப்பான். சில நாட்களுக்குப் பிறகு அவன் வரவேயில்லை. எங்கே போயிருப்பான். என்ன ஆனான் என்பது தெரியவில்லை.
ஒரு நாள் நாங்கள் கொன்னாகர் என்ற ஊருக்குப் படகில் சென்றோம். அந்த ஊரையடைந்து படகிலிருந்து இறங்கிக் கரையில் ஏறினோம்.
கங்கைக் கரையில் அந்தப் பிராமணனைப் பார்த்தோம். பிரபுக்களைப் போல் அவன் ஆற்றங்கரையில் காற்று வாங்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தான். அவன் அருகில் கடந்து