இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
50ஏழாவது வாசல்
“அர்ச்சுனா, சண்டை ஏற்பட்டால் பணம் கிடைக்கும். புகழ் கிடைக்கும். சண்டையில் இறந்து போனால் வீரக்கல் நாட்டுவார்கள். காவியத்தில் போற்றுவார்கள்; பகைவனும் பாராட்டும் பேறு கிடைக்கும்” என்றார் துரோணாச்சாரியார்.
பிறகு அர்ச்சுனன் பீஷ்மரிடம் சென்றான்.
“தாத்தா, சண்டை நல்லதா? சமாதானம் நல்லதா?” என்று கேட்டான்.
“சமாதானம்தான் நல்லது!” என்றார் தாத்தா பீஷ்மாச்சாரியார்.
“ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டான் அர்ச்சுனன்.
"குழந்தாய், சண்டையினால் வீரர் குலத்துக்குப் பெருமை ஏற்படலாம். ஆனால் சமாதானம் நிலவினால் உலகத்துக்கே பெருமை” என்றார் பீஷ்மர்.
அர்ச்சுனனுக்கு அப்போதும் மனம் அமைதி அடையவில்லை. யார் சொன்ன பதிலும் சரியானதாக அவனுக்குத் தோன்றவில்லை.