இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வாந்திபேதிப் பிசாசு என்று ஒரு பிசாசு இருக்கிறது. ஊர் ஊராகப் போய் மக்களை வேட்டையாடுவதுதான் அதன் தொழில்.
முன்னொரு காலத்தில் அந்தப் பிசாசு இந்தியாவிலிருந்து புறப்பட்டது. அரேபியாவில் உள்ள மக்கா நகரத்தை நோக்கிச் சென்றது. போகும் வழியில் பாரசீகத்தைக் கடந்து சென்றது. பாரசீகத்தில் அந்தக் காலத்தில் ஒரு பக்கிரி இருந்தார். அந்தப் பக்கிரி பெரிய ஞானி, கடவுள் பக்தி மிகுந்தவர். அவரை வாந்திபேதிப் பிசாசு சந்திக்க நேர்ந்தது.
அப்போது அந்தப்பக்கிரி அதைப் பார்த்து 'நீ எங்கே போகிறாய்?" என்று கேட்டார்.
‘சாமியாரே, மெக்கா நகரத்தில் இப்போது திருவிழா தொடங்கியிருக்கிறது. உலகின் நாலா-
ஏー4