பக்கம்:ஏழாவது வாசல்.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



 வாந்திபேதிப் பிசாசின் கதை  57

எச்சரிக்கை!” என்று அதனை எச்சரித்து அனுப்பினார்.

வாந்திபேதிப் பேய் சரியென்று கூறி விட்டு மக்கத்திற்குப் போயிற்று.

சில நாட்கள் சென்றன. மக்கத்தில் திருவிழா முடிந்து மக்கள் தத்தம் ஊருக்குத் திரும்பினார்கள். அவ்வாறு திரும்பியவர்களில் சிலர் பாரசீகத்தின் வழியாகச் சென்றார்கள் அவர்கள் மூலம் மக்கத்து விழாவைப் பற்றி பக்கிரி விசாரித்தார். வாந்திபேதியால் இலட்சம் பேர் இறந்து போனார்கள் என்று அறிந்தார். அவர் மனம் துடிதுடித்தது. சினம்பொங்கியது. வாந்திபேதிப் பிசாசைச் சபித்துக் கொண்டேயிருந்தார்.

மக்கத்தில் வேலை முடித்துக் கொண்டு வாந்திபேதிப் பேயும் அந்த வழியாகவே இந்தியாவிற்குத் திரும்பியது. வழியில் பக்கிரியைப் போய்ப் பார்த்து வணக்கம் செய்தது,

அதை நேரில் கண்டதும் பக்கிரிக்கு வந்த கோபம் அப்படி இப்படிப் பட்டதல்ல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழாவது_வாசல்.pdf/59&oldid=994035" இலிருந்து மீள்விக்கப்பட்டது