பக்கம்:ஏழாவது வாசல்.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58ஏழாவது வாசல்

“போக்கிரிப் பேயே! பொய் சொல்லி நாயே! ஆயிரம் பேருக்கு மேல் கொல்வதில்லை என்று உறுதி சொன்னாயே! அல்லாவின் பேரில் ஆணையிட்டாயே! இப்போது இலட்சம் பேரைக் கொன்று விட்டாயே! உன்னை என்ன செய்கிறேன் பார்” என்று துடிதுடித்துக் கடுஞ்சினத்துடன் கொதிக்கின்ற எண்ணெய் போல் குதிகுதித்துப் பேசினார்.

வாந்திபேதிப் பேய் சிறிதும் அஞ்சவில்லை. கலகலவென்று சிரித்தது.

"முனிவர் பெருமானே! என்னை முனிய வேண்டாம். அல்லாவின்பேரால் ஆணையிட்டபடி நான் ஆயிரம் பேருக்குமேல் ஒருவரைக் கூடத் தீண்டவில்லை. என்னால் இறந்தவர் சரியாக ஆயிரம் பேர்தான். மற்றவர்களோ வீண் பயத்தினால் வாந்தியும் பேதியும் ஏற்பட்டு மாண்டனர். அவர்கள் பயந்து செத்ததற்கு நான் என்ன செய்வேன். அது என் குற்றமாகுமா?” என்று கேட்டது.

அதைக் கேட்டுப் பக்கிரி பெருமூச்சு விட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழாவது_வாசல்.pdf/60&oldid=994038" இலிருந்து மீள்விக்கப்பட்டது