இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வாந்திபேதிப் பிசாசின் கதை 59
“ஏ மனித இனமே, பயத்தால் தன்னைத் தானே ஓயாமல் கொலை செய்து கொண்டிருக்கும் உன்னுடைய மூடத் தனத்தை நினைக்க நினைக்க என் நெஞ்சு கலங்குகிறதே! என் செய்வேன்? என்செய்வேன்? என் செய்வேன்? எல்லாம் அல்லாவின் திருவுள்ளப்படியே நடக்கிறது. நம்மால் என்ன செய்ய முடியும்l அல்லாஹோ அக்பர்! அல்லாவின் நாமம் வெல்வதாக!”
இவ்வாறு தன்னைத்தானே தேற்றிக் கொண்டு அமைதியடைந்தார் அந்தப் பக்கிரி.