இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
62ஏழாவது வாசல்
காப்பாற்று!” என்று நான் சொல்வது வழக்கம். ஆனால், காப்பாற்றுங் கடவுளாகிய நீயே என்னைக் கொல்லும் போது நான் யாரைக் கூப்பிட்டு என்ன சொல்வேன்?” என்று கேட்டது. சிறிது நேரத்தில் அது மூச்சிழந்து விட்டது. -
இறந்து விட்ட அந்தத் தவளையைத் துயரத்தோடு பார்த்துக் கொண்டிருந்த இராமர் பெருமூச்சு ஒன்று விட்டார். பிறகு, அழுத்துந் துயரம் மிகுந்த நெஞ்சோடு அங்கிருந்து புறப்பட்டார்.
அறியாமல் செய்யும் பிழையும் தீய பயனையே கொடுக்கும். ஆகையால் எந்தச் செயலிலும் அவசரம் கூடாது. எதையும் கவனத்தோடு செய்ய வேண்டும்.