இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திருடன் போட்ட வேடம் 67
“அரசே, நம் மகள் திருமண வயதையடைந்துவிட்டாள். விரைவில் அவளுக்கு நல்ல மாப்பிள்ளை ஒருவனைப் பார்க்க வேண்டுமே!” என்றாள் அரசி.
“ஆம் நம் மகளுக்கு நாம் பார்க்கும் மாப்பிள்ளை ஒரு தெய்வ பக்தராக இருக்க வேண்டும்” என்றார் அரசர்.
“அப்படியானால்...?”
“நம் ஊர் ஆற்றங்கரையிலே சாமியார்கள் இருக்கிறார்கள் பார்த்திருக்கிறாய் அல்லவா? அவர்களில் ஒருவருக்கு நம் மகளைத் திருமணம் செய்து வைக்க வேண்டும். தெய்வத்தின் அருளால் பிறந்த நம் மகளைத் தெய்வ பக்தர் ஒருவருக்குக் கொடுக்கவே விரும்புகிறேன்” என்றான் அரசன்.
“தங்கள் விருப்பமே என் விருப்பம் என்றாள், அரசரை என்றுமே எதிர்த்துப் பேசியறியாத அரசி.
“நாளையே நான் ஏற்பாடு செய்கிறேன்” என்றான் அரசன்.