இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பறையன் இடித்த சங்கராச்சாரியார் 71
மனந்திருந்திய திருடன் அரசன் மகளை மணக்க மறுத்து விட்டான். அரசன் திரும்பச் சென்று விட்டான். அந்தத் திருடனோ, உண்மை பக்தனாகி பிற்காலத்தில் ஒரு பெரிய மகாத்மா ஆகிவிட்டான்.
உயர்ந்தவர்களைப் போல் வேடம் போடுபவர்களுக்கு சில சமயங்களில் உயர்ந்த எண்ணங்களும் உண்டாகும்.
உயர்ந்த எண்ணங்கள் ஒருவனை உயர் நிலைக்குக் கொண்டு செல்லும்.
ஓர் ஊரில் ஒரு சங்கராச்சாரியார் இருந்தார். அவர்நாள்தோறும் காலையில் ஆற்றுக்குப் போய்க் குளித்துவிட்டு வருவது வழக்கம். ஒருநாள் அவர் குளித்துவிட்டு வரும்போது, வழியில் எதிர்ப்பட்ட ஒரு பறையன் அவர் மீது மெல்ல இடித்துவிட்டான். அவன் சாதாரண பறையன் மட்டுமல்லன்; மாடு