இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஏழாவது வாசல் 75
அவனைச் சுற்றிலும் ஏவலரும் காவலருமாகிய பரிவாரத்தினர் சூழ்ந்து நின்று கொண்டிருந்தனர். அவன் படாடோபமாக அதிகாரங்கள் செய்து கொண்டிருந்தான். அதைக் கண்ட மனிதன் நண்பனை நோக்கி, “இவர் தாம் மன்னரா?” என்று கேட்டான்.
“இவரல்லர்” என்று சொல்லி விட்டு அரண்மனை வேலைக்காரன் உள்ளே அழைத்துச் சென்றான்.
இரண்டாம் வாசலைக் கடந்தார்கள். அங்கே மேலும் படாடோபமாகக் காட்சியளித்தான் ஓர் அதிகாரி. அவனைப் பார்த்து "இவர் தாம் மன்னரா?” என்று கேட்டான் அந்த மனிதன்.
“இல்லை வா” என்று கூறி மேலும் உள்ளே அழைத்துச் சென்றான் அரண்மனை வேலைக்காரன்.
இப்படியே ஆறு வாசலும் தாண்டினார்கள். அங்கங்கே தோன்றிய மேல் அதிகாரிகளைச் சுட்டிக் காட்டி, "இவர்தாம் மன்னரா?" என்று கேட்டுக் கொண்டு சென்றான் அந்த மனிதன்.