ஆத்திசூடி
உரை
சிவபெருமான் விரும்பும் விநாயகக் கடவுளைப்
பலமுறை வாழ்த்தி வணங்குவோம்.
1. நல்லன செய்ய ஆசைப்படு.
2. கோபத்தை அடக்கிக் கொள்.
3. கொடுக்க முடிந்த பொருளை ஒளிக்காமல் கொடு.
4. ஒருவர் மற்றொருவர்க்குக் கொடுப்பதைத் தடுக்காதே.
5. உன் உடைமைப் பொருளை வெளிப்படப் பலமுறையும் சொல்லாதே.
6. மனவலிமையைக் கைவிடாதே.
7. கணக்கையும் இலக்கணத்தையும் இகழாமல் நன்றாகக் கற்றுக்கொள்.
8. ஒருவரிடம் போய் இரப்பது பெருமைக் குறைவாகும்.
9. ஏழை எளியவர்கட்குச் சோறு போட்டு நீ உண்.
10. உலகத்தோடு ஒத்து நடந்து கொள்.
11. எக்காலத்தும் படித்துக் கொண்டேயிரு.
12. யாரிடத்தும் பொறாமையுடன் பேசாதே.
13. தானியங்களை அளவு குறைத்து விற்காதே.
14. கண்டபடி மாற்றிச் சொல்லாதே.
15. ‘ங’ எழுத்துப்போல் நீயும் உன் சுற்றத்தைத் தழுவு.
16. சனிக்கிழமைதோறும் எண்ணெய் முழுகு.
17. யாரிடமும் இனிமையாகப் பேசு.
18. இடம் பெரிதாக வீட்டைக் கட்டாதே.
19. நல்ல குணம் உடையவரோடு நட்புச் செய்.
20. தாய் தந்தையரை மதித்துக் காப்பாற்று.
21. பிறர்செய்த நன்மைகளை மறக்காதே.
22. எந்தச் செயலையும் உரிய காலத்திலேயே செய்.
23. நீதிமன்றத்தில் இலஞ்சம் வாங்கி வாழாதே.