பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
"சங்கத் தமிழ் மூன்றுந் தா"


ஆத்திசூடி


ஒளவையார் இயற்றியது.


கடவுள் வணக்கம்

ஆத்தி சூடிஅமர்ந்து தேவனை
ஏத்தியேத்தித் தொழுவோம் யாமே



1. அறஞ்செய விரும்பு

2. ஆறுவது சினம்

3. இயல்வது கரவேல்

4. ஈவது விலக்கேல்

5. உடையது விளம்பேல்

6. ஊக்கமது கைவிடேல்

7. எண்ணெழுத் திகழேல் .

8. ஏற்ப திகழ்ச்சி

9. ஐய மிட்டுண்

1O. ஒப்புர வொழுகு

11. ஓதுவ தொழியேல்

12. ஔவியம் பேசேல்

13. அஃகம் சுருக்கேல்

14. கண்டொன்று சொல்லேல்

15. ஙப்போல் வளை

16. சனிநீ ராடு

17. ஞயம்பட வுரை

18. இடம்பட வீடெடேல்

19. இணக்கமறிந திணங்கு

20. தந்தை தாய்ப்பேண்

21. நன்றி மறவேல் .

22. பருவத்தே பயிர்செய்

23. மன்று பறித்துண்ணேல்


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/15&oldid=1456897" இலிருந்து மீள்விக்கப்பட்டது