பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



14

உரை



24. நல்லொழுக்கத்திற்கு மாறாக நடக்காதே.

25. நச்சுப்பாம்புகளைத் தொடாதே.

26. இலவம் பஞ்சுபோல மெல்லத் தூங்கு.

27. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதே.

28. சிறப்பில்லாத செயல்களைச் செய்யாதே.

29. இளம் பருவத்திலே கல்வி கற்கத் தொடங்கு.

30. அறத்தினை மறவாமற் செய்.

31. காலையில் அதிக நேரம் தூங்காதே.

32. கடுமையாகப் பேசுவதை மறந்துவிடு.

33. நல்ல கொள்கையை விடாமல் காப்பதே விரதமாகும்.

34. பிறர்க்குப் பயன்படும்படி வாழ்வாய்.

35. இழிவான குணத்தையும் செயலையும் நீக்கு.

36. உயர்குணத்தை எந்தநிலையிலும் கைவிடாதே.

37. ஒருவரிடம் கூடிப் பழகிய பிறகு பிரியாதே.

38. பிறர்க்குத் தீங்கு செய்வதை நீக்கு.

39. நல்ல கருத்துக்களை விரும்பிக் கேட்க முயற்சி செய்.

40. உனக்குத் தெரிந்த கைத்தொழிலைப் பிறர்க்கு மறைக்காதே.

41. பிறர் பொருளைக் கொள்ளையடிக்க ஆசைப்படாதே.

42. தீங்கான விளையாட்டுக்களை நீக்கு. -

43. அரசு இடும் சட்டத்துக்கு அடங்கி நட -

44. கல்வி அறிவு ஒழுக்கம் நிறைந்தவர்களுடைய கூட்டத்தில் எப்பொழுதும் இரு.

45. பொய்யான சொற்களை மெய்யென்று நம்பும்படி பேசாதே.

46. நல்ல பண்புகளை மறக்காதே.

47. கேட்போர் வெறுப்பு அடையும்படி பேசாதே.

48. சூதாடுதலை விளையாட்டாகவும் விரும்பாதே.

49. செய்யும் செயல்களைச் செம்மையாகச் செய்.

50. நல்ல இடமாகத் தேர்ந்தெடுத்துச் சேர்ந்து கொள்.

51. 'சீ' என்று வெறுக்கும்படி அலையாதே.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/16&oldid=1356733" இலிருந்து மீள்விக்கப்பட்டது