பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆத்திசூடி

15





24. இயல்பலா தனசெயேல்

25. அரவ மாட்டேல்

26. இலவம் பஞ்சிற்றுயில்

27. வஞ்சகம் பேசேல்

28. அழகலாதன செயேல்

29. இளமை யிற்கல்

30. அறனை மறவேல்

31. அனந்த லாடேல்

32. கடிவது மற

33. காப்பது விரதம்

34. கிழமைப் படவாழ்

35. கீழ்மை யகற்று

36. குணமது கைவிடேல்

37. கூடிப் பிரியேல்

38. கெடுப்ப தொழி

39. கேள்வி முயல்

40. கைவினை கரவேல்

41. கொள்ளை விரும்பேல்

42. கோதாட் டொழி

43. சக்கர நெறிநில்

44. சான்றோ ரினத்திரு

45. சித்திரம் பேசேல்

46. சீர்மை மறவேல்

47. சுளிக்கச் சொல்லேல்

48. சூது விரும்பேல்

49. செய்வன திருந்தச் செய்

50. சேரிட மறிந்துசேர்

51. சையெனத் திரியேல்


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/17&oldid=1456898" இலிருந்து மீள்விக்கப்பட்டது