பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

உரை



52. சொல்லில் குற்றம்படப் பேசாதே.

53. சோம்பலாகிக் கண்டபடி திரியாதே.

54. சிறந்தவன் எனப் புகழும்படி நடத்துகொள்.

55. எளியவர்கட்குத் தானங் கொடுக்க ஆசைப்படு.

56. நாராயணனுக்குத் தொண்டனாக இரு.

57. கொடுமையான செயல்களை நீக்கு.

58. துன்பம் வரும்படி நடந்து கொள்ளாதே.

59. எந்தச் செயலையும் முறையாக எண்ணிப் பார்த்துப் பிறகு செய்.

60. கடவுளை இகழ்ந்து பேசாதே.

61. நீ வாழும் தேசத்தில் உள்ளவர்களோடு ஒத்து வாழ்.

62. மனைவி சொல்வதையெல்லாம் அப்படியே கேட்டு நடவாதே.

63. பழம் பெருமையை மறவாதே.

64. தோல்வி தரும் செயல்களில் ஈடுபடாதே.

65. நல்ல குணங்களை உறுதியாகப் பற்றிக்கொள்.

66. நாட்டுக்குப் பொருத்தமான நல்ல செயல்களைச் செய்.

67. உனக்கு உரிய நிலையினின்றும் எக்காரணத்தாலும் தாழ்ந்துவிடாதே.

68. ஆழமான நீர்நிலைகளில் விளையாடாதே.

69. நோய் தரும் தின்பண்டங்களைச் சாப்பிடாதே.

70. நல்ல நூல்கள் பலவற்றைக் கற்றுக்கொள்.

71. உழவிற்சிறந்த நெல்லை உண்டாக்கு.

72. நேர்மையாகவும் நாணயமாகவும் நடந்து கொள்.

73. பிறர் வருந்தும் தீய வினைகளைச் செய்யாதே.

74. பயனில்லாத இளக்கமான சொற்களைப் பேசாதே.

75. நோய் வரும்படி நடந்து கொள்ளதே.

76. பழியான இழி சொற்களைப் பேசாதே.

77. பாம்பைப் போன்ற கொடியவரோடு பழகாதே.

78. மொழியைப் பிழையாகப் பேசாதே.

79.பெருமை.தரும் நல்வழியில் நில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/18&oldid=1356749" இலிருந்து மீள்விக்கப்பட்டது