பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆத்திசூடி

19




80. புகழ்ந்தாரைப் போற்றிவாழ்

81. பூமி திருத்தியுண்

82. பெரியாரைத் துணைக்கொள்

83. பேதைமை யகற்று

84. பையலோ டிணங்கேல்

85. பொருள்தனைப் போற்றிவாழ்

86. போர்த்தொழில் புரியேல்

87. மனந் தடுமாறேல்

88. மாற்றானுக் கிடங்கொடேல்

89. மிகைபடச் சொல்லேல்

90. மீதுண் விரும்பேல்

91. முனைமுகத்து நில்லேல்

92. மூர்க்கரோ டிணங்கேல்

93. மெல்லினல்லாள் தோள்சேர்

94. மேன்மக்கள் சொற்க்கேள்

95. மைவிழியார் மனையகல்

96. மொழிவ தறமொழி

97. மோகத் தைமுனி

98. வல்லமை பேசேல்

99. வாதுமுற். கூறேல்

100. வித்தை விரும்பு

101. வீடு பெறநில்

102. உத்தம னாயிரு
 
103. ஊருடன் கூடிவாழ்

104. வெட்டெனப் பேசேல்

105. வேண்டி வினைசெயேல்

106. வைகறைத் துயிலெழு

107. ஒன்னாரைத் தேறேல்

108. ஓரஞ் சொல்லேல்


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/21&oldid=1356762" இலிருந்து மீள்விக்கப்பட்டது