கொன்றை வேந்தன்
சிவபெருமானின் திருக்குமரனாம் விநாயகக் கடவுளின்
திருவடிகளை நாள்தோறும் வணங்குவோம். -
1. தாயும் தந்தையும் கண்கண்ட தெய்வங்கள்.
2. கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்குவது மிக நல்லது. - -
3. மனைவியுடன் வாழ்ந்து செய்யும் அறமே நல்லறமாகும்.
4. கருமிகளின் செல்வத்தைத் தீயவர் எடுத்துக்கொள்வர்.
5. அளவாக உண்பது பெண்களுக்கு அழகைத் தரும்.
6. ஊராருடன் பகைத்துக் கொண்டவன் அடியோடு அழிவான்.
7. கணக்கும் இலக்கியமும் மக்களுக்குக் கண்கள் போன்றன.
8. சொல்வதற்கு முன் குறிப்பறிந்து செய்யும் மக்கள் அமிழ்தத்தை ஒப்பார்கள்.
9. பிச்சை எடுத்தாயினும் கடமைகளை விடாமற் செய்.
10. சிறந்த ஒருவனைத்துணையாய்க் கொண்டு இல்லறம் நட
11. வேதம் ஒதுவதிலும் ஒழுக்கமே சிறந்தது.
12. பொறாமை கொண்டால் செல்வம் அழியும்.
13. தானியத்தையும் செல்வத்தையும் விண் செலவு செய்யாது தேடி வை.
-
14. பெண்களுக்குக் கற்பாவது உறுதியாக இருப்பது.
15. தம்மைத் தாமே காத்துக் கொள்வது பெண்களுக்கு அழகு
16. விரும்பிய பொருள் கிடைக்காதென்றால் அதனை உடனே மறக்க.
17. உனக்குக் கீழ்ப்பட்டவரிடத்தும் பணிவாகப் பேசு.
18. குற்றத்தையே பார்த்தால் சுற்றமே இருக்காது.
19.கூர்மையான அம்பு கையில் இருந்தாலும் வீராப்புப் பேசாதே.
20.தீங்கே செய்யின் அவன் நட்பை விடுவது நல்ல.
21. பொருளை இழந்தபோது மனம் தளராது இருந்தால் செல்: மீண்டும் வரும்.