“சங்கத்தமிழ் மூன்றுந்தா”
கொன்றை வேந்தன்
ஒளவையார் இயற்றியது
கடவுள் வணக்கம்
கொன்றை வேந்தன் செல்வன் அடியிணை
என்று மேத்தித் தொழுவோம் யாமே.
1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
2. ஆலயந் தொழுவது சாலவும் நன்று
3. இல்லற மல்லது நல்லற மன்று
4. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகு
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
7. எண்ணும் எழுத்துங் கண்ணெனத் தகும்
8. ஏவா மக்கள் மூவா மருந்து
9. ஐயம் புகினுஞ் செய்வன செய்
10. ஒருவனைப் பற்றி ஓரகத் திரு
11. ஓதலி னன்றே வேதியர்க் கொழுக்கம்
12. ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற் கழிவு
13. அஃகமுங் காசுஞ் சிக்கெனத் தேடு
14. கற்பெனப் படுவது சொற்றிறம் பாமை
15. காவல் தானே பாவையர்க் கழகு
16. கிட்டா தாயின் வெட்டென மற
17. கீழோ ராயினுந் தாழ வுரை
18. குற்றம் பார்க்கிற் சுற்ற மில்லை
19. கூரம் பாயினும் வீரியம் பேசேல்
20. கெடுவது செய்யின் விடுவது கருமம்
21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை