பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொன்றைவேந்தன்

23


22. கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி

23. கொற்றவன் அறிதல் உற்றிடத் துதவி

24. கோட்செவிக் குறளை காற்றுடன் நெருப்பு

25. கெளவை சொல்லின் எவ்வருக்கும் பகை

26. சந்ததிக் கழகு வந்தி செய்யாமை

27. சான்றோ ரென்கை யீன்றோட் கழகு

28. சிவத்தைப் பேணின் தவத்திற் கழகு

29. சீரைத் தேடின் ஏரைத் தேடு

30. சுற்றத்திற் கழகு சூழ விருத்தல்

31. சூதும் வாதும் வேதனை செய்யும்

32. செய்தவம் மறந்தாற் கைதவ மாளும்

33. சேமம் புகினும் யாமத் துறங்கு

34. சையொத் திருந்தால் ஐய மிட்டுண்

35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்

36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்

37. தந்தை சொல்மிக்க மந்திர மில்லை

38. தாயிற் சிறந்தொரு கோயிலு மில்லை

39. திரைகட லோடியுந் திரவியத் தேடு

40. தீராக் கோபம் போராய் முடியும்

41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு

42. தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும்

43. தெய்வம் சீறிற் கைதவ மாளும்

44. தேடா தழிக்கிற் பாடாய் முடியும்}}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/27&oldid=1332716" இலிருந்து மீள்விக்கப்பட்டது