பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

உரை



45. பனிபெய்யும் பருவத்தில் வைக்கோலால் வேய்ந்த கூரை வீட்டில் உறங்கு. . . . .

46. பிறர்க்கு அடிமை செய்து உண்பதைக் காட்டிலும் தானே
உழுது உண்பது இன்பந்தரும். . . .

47. நண்பனிடங் கூட உன் வறுமை முதலிய எளிமையை
வெளிப்படச் சொல்லாதே. -

43. தீய நட்பு பெருந் துன்பத்தைத் தரும்.

49. நாடு முழுதும் வாழ்ந்தால் யாருக்கும் துன்பம் இல்லை.

50. நிலைபெறக் கற்றலாவது சொல்லும் சொல் தவறாமையாம்.

51. நீர்வளம் பொருந்திய ஊரின்கண் வாழ்.

52. சிறிய காரியத்தையும் ஆராய்ந்து செய்க. -

53. அறநூலில் சொல்லப்பட்ட முறைகளைத் தெரிந்து
நல்லவழியில் நட.

54. நம் மனத்திற்குத் தெரியாத வஞ்சகம் இல்லை.

55. மனம் ஒன்றுபடாத தவம் செம்மையாக அமையாது.

56. நலிந்தவரிடத்தும் சிறுமையான சொற்களைக் கூறாதே.

57. உருவத்தால் சிறியவரும் நல்ல காரியத்தால் எல்லோராலும்
விரும்பப்படுவர். -

58. எந்த உயிரையும் கொல்லாமையும் அதன் ஊனைத்
தின்னாமையுமே விரதமாகும். -

59. பயிர் விளைச்சலின் மூலம் செய்த நன்மை தெரியும்.

60. பால் உணவானாலும் உரியகாலத்திற் குடி,

61. பிறன் மனைவியை விரும்பாமை தலைசிறந்த அறம் ஆகும்.

62. தாய்ப்பால் குடித்து வளர்ந்த குழந்தை எப்பாரத்தையும்
தாங்கும். . -

63. புலால் உண்ணல், கொலை செய்தல், திருடுதல் ஆகிய
குற்றங்களை நீக்கு. •

64. கீழ்மக்களிடத்தில் சிறப்பான ஒழுக்கம் அமைவதில்லை.

65. மெய்ஞ்ஞானம் பெற்றவர்க்கு உறவும் இல்லை, வெறுப்பும்
இல்லை. - .

66. அறியாதவர் போல் இருத்தல் பெண்களுக்குச் சிறப்பாகும்.

67.பண்பாக நடந்து கொண்டால் உலகத்தார் பாராட்டுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/28&oldid=1332717" இலிருந்து மீள்விக்கப்பட்டது