25
கொன்றை வேந்தன்
45.தையும் மாசியும் வையகத் துறங்கு.
46.தொழுதூண் சுவையின் உழுதூ னினிது.
47.தோழ னோடும் ஏழைமை பேசேல்.
48.நல்லிணக்க மல்லது அல்லற் படுத்தும்.
49.நாடெங்கும் வாழக் கேடொன்றும் மில்லை.
50.நிற்கக் கற்றல் சொற்றிறம் பாமை.
51.நீரகம் பொருந்திய ஊர கத்திரு.
52.நுண்ணிய கருமமும் எண்ணித் துணி.
53.நூன்முறை தெரிந்து சீலத் தொழுகு.
54.நெஞ்சை யொளித்தொரு வஞ்சக மில்லை.
55.நேரா நோன்பு சீரா காது.
56.நைபவ ரெனினும் நொய்ய வுரையேல்.
57.நொய்யவ ரென்பவர் வெய்யவ ராவர்.
58.நோன்பென் பதுவே கொன்று தின்னாமை
59.பண்ணிய பயிரிற் புண்ணியம் தெரியும்.
60.பாலோ டாயினுங் காலம் அறிந்துண்.
61.பிறன்மனை புகாமை அறமெனத் தகும்.
62.பீரம் பேணிற் பாரந் தாங்கும்.
63.புலையுங் கொலையுங் களவுந் தவிர்.
64.பூரியோர்க் கில்லை சீரிய வொழுக்கம்.
65.பெற்றோர்க் கில்லை சுற்றமுஞ் சினமும்.
66.பேதைமை என்பது மாதர்க் கணிகலன்.
67.பையச் சென்றால் வையந் தாங்கும்.